அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் நடிக்கிறார்.
தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர் மற்றும் இதர கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி மற்றும் திரையுலக பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்தபடியாக இந்த திரைப்படத்தின் வெளியீடு தேதியை எதிர்பார்த்து திரையுலகத்தினர் காத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் இன்னும் 14 நாட்களில் அதாவது அக்டோபர் 17 ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் வடசென்னை திரைப்படத்தின் பாடல் முன்னோட்டமானது இன்று 5 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.