கறிவேப்பிலையின் நன்மைகள்??

தினசரி நாம் உண்ணும் உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை நாம் தூக்கி எறிவோம், ஆனால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என தெரியாமலையே நாம் இதை செய்து வருகின்றோம்.

விட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் நிறைந்துள்ள இந்த கறிவேப்பிலையில் உடலுக்கு தேவையான அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

கறிவேப்பிலையின் நன்மைகள்:

இது வரை நாம் கறிவேப்பிலையை தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும், கருமையாகும் என மட்டுமே கேள்விப்பட்டு வந்தோம். ஆனால் காலையில் தினமும் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் குறைந்து அழகான தோற்றத்தை பெறலாம்.

பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும்.
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இருதய நோய் வராமலும் தடுக்கும்.

கறிவேப்பிலை கல்லீரலைப் பாதுகாப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் இரும்பு சாது அதிகம் இருப்பதால் சிறுவர்களின் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவியாய் இருக்கும்.

கறிவேப்பிலையை எப்போதும் காய்கறி கடைகளில் இலவசமாகவே தருகின்றனர். இதனால் தான் இதன் அருமை மக்களுக்கு தெரியவில்லையோ எனவோ என வீட்டில் உள்ள வயதானவர்கள் எண்ணுகின்றனர்.