தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான அளவில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. அதுபோக தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழைப்பொழிவு ஆங்காங்கே இருந்து வருகிறது.
இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு வாரத்திற்கு மழைப்பொழிவு இருப்பதால் அபாய கட்டத்தை எட்டிவிடும் என்று மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பொதுப்பணித்துறையினர் கட்டுபாட்டின் கீழ் 89 அணைகள் உள்ளன. இதில் 15 அணைகளுக்கு மேல் நிரம்பி விட்டன.
ரெட் அலெர்ட் மழையினால் மீதம் உள்ள அணைகளும் படுவேகமாக நிரம்பக்கூடும் என்பதால் உடனடியாக கண்காணிப்பில் ஈடுபடுமாறு மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய நீர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கும், பேரிடர் மேலாண்மை செயலாளருக்கும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
சிறிய அணைகளே மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்த கூடும் என்பதால், அவற்றின் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக பொன்னியாறு, வெள்ளாறு, பாலாறு மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றை அதிதீவிரமாக கண்காணிக்க சொல்லியுள்ளது.