மருமகள், மாமியார் எதிரி போல நடந்து கொள்ளும் இந்த காலத்தில் இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து அபாயகட்டத்தில் இருந்த தனது மருமகளுக்காக ,மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா. 32 வயது நிறைந்த இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. சோனியா தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி ஆகியோருடன் வசித்து வந்தார்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சோனியா தொடர்ந்து டயாலிஸிஸ் செய்து வந்தார். ஆனால் அந்த முயற்சியும் ஒரு கட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. அதனால் அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூற்றியுள்ளனர்.
இந்நிலையில் சிறுநீரகம் தானம் வழங்க சோனிகாவின் தாய், தந்தை மற்றும் சகோதரரின் ஆகியோரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர்களது சிறுநீரகம் சோனியாவிற்கு பொருந்திய நிலையில் உள்ளது. ஆனால் அவர்கள் யாரும் சிறுநீரகம் கொடுக்க முன்வரவில்லை மாறாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது மருமகளை காப்பாற்ற எண்ணி தானே சிறுநீரகத்தை தனமாக கொடுக்க முன்வந்தார்.
இதையடுத்து கனிதேவியின் சிறுநீரகம் பொருந்திய நிலையில் சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எந்த பிரச்சினையும் இல்லாமல் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சோனிகா, என் மாமியார் எனக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளார். அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் ,என் வாழ்நாள் முழுவதும் என் மாமியாருக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன், என கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.