கடந்த பல வருடங்களாக சோலை வரி (வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு செலுத்தப்படும் வருடாந்த வரி) செலுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வவுனியா நகரசபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்றும் இன்றும் (சனிக்கிழமை) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நகரசபை உத்தியோகத்தர்கள், வரி செலுத்தாத வர்த்தகர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அத்தோடு, நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255 பிரிவு 170இன் பிரகாரம், ஆடம்பரப் பொருட்கள் கையேற்கப்பட்டு அவற்றை ஏல விற்பனை செய்வதன் மூலம் சோலை வரி நிலுவையை சீர்செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபை 2018.09.06.07 இலக்க சபை தீர்மானத்திற்கு அமைய நகரசபை செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.