தனது பிஞ்சு குழந்தைகளை ஆற்றில் தூக்கி எறிந்த கொடூர தாய்!

தனது 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தானும் தற்கொலைக்கு செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கொத்து ஸ்வாதி.இவரது கணவர் மோகன்.இவர் உள்ளுர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஸ்வாதி தன்னுடைய 3 குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேருக்கு முத்யலு என்ற நபர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, மீட்பு பணியில் ஈடபட ஆரம்பித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆற்றில் தூக்கி எறியப்பட்ட அவர்களுடைய மகள்கள் சாத்விகா என்ற 6 வயது குழந்தை, மிதுனா என்ற 4 வயது குழந்தையின் உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருடைய 3 வயது மகன் மமந்த் குமார் உடலை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் உயிருடன் மீட்கப்பட்ட ஸ்வாதி , யசோதா மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு மோகனுக்கு அவருடைய மனைவிக்கு சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.