புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், கடந்த வாரம் வியாழக்கிழமை திமுகவின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அந்தக் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில், பேனர்களையும் அந்த பகுதிகளில் வைத்திருந்தனர். அந்த பொதுக்கூட்டத்தில் திமுக வின் கழக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா அவர்கள் கலந்துகொள்ளவிருந்தார். அவரை வரவேற்கும் வகையிலும் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வைக்கப்பட்டிருந்த பேனரில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன், ஊழல் திமுக அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் என பேனர்களில் வைத்திருந்தனர். அவர்கள் தவறாக வைத்திருந்ததால் இதனை பிற கட்சியினர் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் அந்த பேனரில் ஊழல் அதிமுக அரசு என குறிப்பிடுவதற்கு பதிலாக அவர்களுடைய கட்சியின் பெயரையே ஊழல் திமுக அரசு என குறிப்பிட்டிருந்தனர். அந்த பேனரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.