பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு எச்சரிக்கை விடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். மேலும் திரையுலக பிரபலன்களான சிம்ரன், பாபிசிம்ஹா மட்டும் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் திரைக்கு பொங்கல் பண்டிகைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் இருந்து எடுக்கப்படும் ரஜினிகாந்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைய தளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த செய்திகள் செய்தி தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

இந்த விசயத்தை கவனித்த அந்த திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பார்ந்த பேட்ட திரைப்பட குழுவினர்களின் கவனத்திற்கு., திரைப்படத்தின் புகைப்படங்களை யாரும் இணையத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும், மேலும் தொலைக்காட்சியை பார்க்கையில் தந்தி தொலைக்காட்சியில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது., இது போன்ற செயல்களை செய்யாதீர்கள்., இது தொழில் தர்மமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.