மனைவியின் தலையை துண்டித்த பின் விடிய விடிய கணவன் செய்த செயல்.!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள, காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். இவருக்கு வயது 30. இவருக்கும், தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, ஜெசிந்தா ஜோஸ்பின் (26) என்ற பெண்ணுக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சங்கர், ஜோஸ்பின் வைத்திருந்த நகைகள் சிலவற்றை அவருக்கு தெரியாமல் எடுத்து அடகு வைத்து குடும்ப செலவு செய்துள்ளார். இதனையறிந்த ஜோஸ்பின் நகைகள் குறித்து சங்கரிடம் கேட்டு உள்ளார்.

அதற்க்கு அவர் மழுப்பலாக பதில் கூறவே, இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற ஜோஸ்பின் தன நகைகள் திரும்ப வந்தால் தான் வருவேன் கணவருடன் மறுத்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 5 ஆம் தேதி, சங்கரின் தாயும் தந்தையும் ஜோஸ்பின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி அவரை தங்களோடு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த உடன் ஜோஸ்பினுக்கும் சங்கருக்கும் மீண்டும் சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சங்கரும் அவரது மனைவியும் வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள அறையில் உறங்க சென்றுள்ளனர். அப்போது ஆசைக்கு இணங்குமாறு சங்கர் சகாயராஜ் அழைத்துள்ளார்.

ஆனால், மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோவமான சங்கர், தான் மனைவி ஜோஸ்பின் தலையை வெட்டி துண்டித்துள்ளார். பின் அந்த படுக்கையிலேயே மனைவியின் உடலையும் தலையையும் தனித்தனியாக வைத்துவிட்டு இரவு முழுவதும் அருகிலேயே படித்து உறங்கியுள்ளார்.

நேற்று மகனின் பெட்ரூம் கதவை தட்டியுள்ளார் சங்கரின் பெற்றோர் படுக்கையில் ஜோஸ்பினின் தலை தனியாக உடல் தனியாக கிடப்பதைக் கண்டு கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆக்கம் பக்கத்தினர் இந்த கொடூர சம்பவத்தை போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

இதனையடுத்து போலீசார் சங்கர் சகாயராஜை கைது செய்தனர். மேலும் ஜோஸ்பினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.