அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி…

கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அபிராமிக்கும் பிரியாணிக் கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால், இரண்டு குழந்தைகளையும் பாலில் மாதவிடாய் மாத்திரங்கள் கலந்து கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்காதலுடன் தப்ப முயன்ற அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி புழல் சிறையில் அவமானத்தால் தற்கொலைக்கு முயன்றதாகவும், சிறையில் இருந்த மற்ற கைதிகள் அவரை மீட்டு,சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.