கணவனைக் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவள் கள்ளக் காதலனை மங்களுர் வரை தேடிச் சென்று கைது செய்த போலீஸ்…..!
கர்நாடக மாநிலம் மங்களுரைச் சேர்ந்த, முகமது சமீர், அரபு நாட்டில் பொறியாளராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த பிர்தோஷ் (வயது 27) என்பவருக்கும், திருமணம் ஆனது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
சமீர் வெளி நாட்டில் வேலை பார்த்ததால், வருடத்திற்கு ஒரு முறை தான் விடுமுறையில் ஊருக்கு வருவார். அதனால், பிர்தோஷ், தன் தாய் வீட்டில் இருந்தார். அவர்கள் வீட்டிற்கு அருகே வசித்த, யாசிக் என்ற கார் டிரைவரிடம் பிர்தோஷ் பழகினார். அந்த நட்பு கள்ளக் காதலாக மாறியது.
இந்த சமயத்தில், சமீர் வெளி நாட்டில் இருந்து, விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். தங்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய, கள்ளக் காதலர்கள், சமீரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். சுற்றுலா போவதாக போக்கு காட்டி, கள்ளக் காதலனுடடைய காரிலேயே, வாடகை பேசி, கொடைக்கானலுக்குச் சென்றனர். காரை, யாசிக் தான் ஓட்டி வந்தார்.
இடையே. இளநீர் வாங்கி, அதில் அதிக அளவு துாக்க மாத்திரைகளைக் கலந்து சமீருக்கு கொடுத்தனர். அதனால், அவர் மயங்கினார். பின் கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறை அருகே, காரின் கதவைத் திறந்ததும், சமீர் சாய்ந்து விழுந்தார்.
பின், இருவரும் சேர்ந்து அவரின் கழுத்தை அறுத்து, அவரது உடலை, பள்ளத்தில் வீசி விட்டுச் சென்றனர். இவரது உடலைக் கண்டெடுத்த தேவதானம்பட்டி போலீசார், கொலையாளிகளான கள்ளக் காதலர்களைத் தேடி மங்களுர் வந்தனர். அங்கு, அவர்களைக் கண்டு பிடித்து, கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
தற்போது, இருவரும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.