பள்ளி மாணவிக்கு வாலிபர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் மாணவிக்கு சதீஷ் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது,
இருவரும் அடிக்கடி பார்த்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் பள்ளி விடுமுறையின் போது, அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி தனியாக பள்ளி வளாகத்திற்கு வரவழைத்துள்ளார்.மேலும் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
மேலும் அந்த குளிர்பானத்தை அருந்திய மாணவி மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ்-அப் மூலம், இந்த வீடியோ அனைவருக்கும் பரவ இந்த ஒரு கட்டத்தில் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மனைவியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி, போலீசார் சதீஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.