தனியார் பேருந்துகளின் கோர விபத்து.!

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தினமும் தனியார் பேருந்துகள் அதிகளவில் செல்கிறது. அந்த வகையில் நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து சுமார் 40 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேருந்திற்கு முன்னால் கட்டுமான கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அந்த லாரியின் பின்பக்கத்தில் வேகமாக சென்று மோதியது. இதில் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் மாற்று ஓட்டுனரின் மீது கம்பிகளானது பாய்ந்தது. மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த 7 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.