அடியோடு சிதையும் அதிமுக.. : உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் வட்டாரம்.!

ஜெயலலிதா சமாதியில் முதன்முதலாக தியானம் மேற்கொண்ட பின்னர் சசிகலாவை எதிர்க்க தொடங்கினார் ஓ.பி.எஸ்.

பின்னர் சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு தர்மயுத்தம் என்று தனியே பிரிந்து சென்றார்.

அந்த சமயத்தில் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் சென்று இணைந்து கொண்டனர். அந்த நேரத்தில் தஞ்சாவூரில் தர்மயுத்த மாநாடு நடத்தினார் ஓ.பி.எஸ்.

அதற்கு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்தனர். அதில் ஒருவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த மயில்வாகனனின் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

தற்சமயம் ஓ.பி.எஸ்- தினகரன் சந்திப்பு குறித்து தினம் தினம் சர்ச்சையான தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளன.

இதனால் அதிமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சமீப காலமாக தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து வருகிறது. இதில் பல இடங்களில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்,பட்டுகோட்டை பால்வள உற்ப்பத்தியாளர்கள் சங்கத்திற்கான தலைவர் பதவியை கடந்த முறை அதே பொறுப்பில் இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரான மயில்வாகனன் கேட்டார்.

ஆனால் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் அந்த பதவியை நகர செயலாளரான சுபராஜ் என்பவருக்கு பரிந்துரை செய்தார்.

இதனால் அதிருப்தியடைந்த மயில்வாகனன் நேற்று மாலை அ.தி.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் சேர்ந்து விட்டார்.

இப்படி ஓ.பி.எஸ் தரப்பில் நிறைய பேர் அதிருப்தியில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அணி மாறவோ, கட்சி மாறவோ தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.