14 வயதுச் சிறுமி தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை……..!!

தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றதுடன், சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.கோண்டாவில் மேற்கு பகுதியினை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.