முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் அமைப்புச் செயலாளருமான செந்தில்பாலாஜி கரூரில் மூன்று இடங்களில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இதில் நேற்று வேலாயுதம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது கலந்துகொண்டு பேசிய டி.டி.வி.தினகரன் பல உண்மைகளை மக்கள் மத்தியில் போட்டுடைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிந்த நண்பர் மூலம் தர்மயுத்த மனிதர் என்னிடம் பேசினார்.
தான் தவறு செய்து விட்டதாகவும், நாம் இந்த எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் பேசினார்.
ஆனால், இப்போது அவரோடு ஒட்டி உறவாடி அவர் தலைமையின் கீழ் ஆட்சியை நடத்துதுகிறார்.
மீண்டும் கடந்த மாதம் என்னை அழைத்த தர்மயுத்தர், ‘இந்த ஆட்சியை சேர்ந்து அகற்றுவோம்.
பிறகு உங்களுக்கு உயர் பொறுப்பு கிடைக்க வழி செய்கிறேன்’ என்று ஆசை ஆசை வார்த்தை கூறி அவர் பக்கம் இழுக்க பார்த்தார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரட்டும். அப்போது, இந்த ஆட்சியாளர்கள் தானாக வீட்டுக்கு போவார்கள்.
சில மாதங்களில் இவர்கள் ஆட்சி கவிழ்ந்துவிடும். அப்போது, நாம் அம்மா வழியில் ஏழை,எளிய மக்களுக்கான ஆட்சியை நடத்துவோம்.
இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் செய்றதா ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியை நாம் நடத்துவோம்’ என்று பேசியுள்ளார்.