சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் வெளியீடு..!

திருநங்கை திருநங்கையாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துவருகிறார். திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் திருநங்கையாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை சுற்றிலும் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் ஆகியோர் பலர் உள்ளனர்.