நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதாவின், மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் சேர்ந்து 3-வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடிக்கும் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார்.
அவரின் இரண்டாவது மனைவி ஹமீதாவின் மகள் லைலா அலிகான் மற்றும் மகன் மீரான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வஹிதா கூறுகையில், தன் மீது தாக்குதல் நடக்கும் போது, கணவன் மன்சூர்அலிகான் வேடிக்கை பார்த்ததாகவும், மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.