கேள்விக்குறியான ராகுலின் நிலை.! மத்திய அரசு அவசர நடவடிக்கை.!

நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் திறந்த வேனில் சென்றபடி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவரை வரவேற்க சாலையோரம் கட்சி தொண்டர் ஒருவர் வைத்திருந்த ஹீலியம் நிரப்பிய பலூன்கள், மற்றொரு தொண்டர் வைத்திருந்த ஆரத்தி தீயில் உரசியது. இதில் பலூன்கள் வெடித்துச் சிதறி தீப்பிழம்பு உருவானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்ப்படவில்லை.

ஆனாலும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கும் தேசிய தலைவர் ஒருவருடைய பிரசாரத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

இதுபற்றி விசாரணை நடத்த மத்திய பாதுகாப்பு அமைப்பு ஒரு குழுவை நியமிக்கும். அந்த குழு, இது சம்பவம் எப்படி நடந்தது? யார் இதன் பின்னணியில் இருந்தது? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையாக அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.