ஆளுநர் குறித்து நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் கோபால் அவர்களை இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
பிரபல நாளிதழான நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னையில் இருந்து புனே செல்லவிருக்கும் போது காவல் துறை கைது செய்துள்ளது. ஆளுநரின் தனி செயலாளர் அளித்த புகாரில் 124 -A பிரிவில் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதையடுத்து சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் அவரை விசாரித்து வருகின்றனர். நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு, காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாக்கீரன் கைது செய்யப்பட்ட காவல் நிலையம் முன் போராட்டம் செய்த மதிமுகவின் தலைவர் வைகோவை போலீசார் கைது செய்துள்ளனர்.