நவராத்திரி கொலு 2018: முதல் நாள் (09-10-2018)

நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.

நவராத்திரி பண்டிகையை கொண்டாட கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரியின் முதல் நாள்:-

அம்பாள்: சாமுண்டி.

கோலம்: பச்சரிசி மாவால், புள்ளிக் கோலம் போட வேண்டும்.

மலர்கள்: தாமரை, மல்லிகை, வில்வம்.

நெய் வேத்தியம் : காலையில் வெண்பொங்கல், மாலையில் காராமணி சுண்டல்.

பூஜை நேரம்: காலை, 10:30 – 12:00 மணி வரை; மாலை 6:00 – 7:30 மணி வரை.