தினகரன் பக்கம் இழுத்து போடப்படும் முக்கிய புள்ளிகள் : தமிழக அரசியலில் திடீரென்று நிலவி வரும் பதற்ற நிலை.!

தினகரன் அணியை அதிமுகவோடு இணைத்துக் கொள்வதற்கான முயற்சி நடந்து வருவதாக அதிமுக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

பன்னீர் செல்வம் – தினகரன் சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்து அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த தகவல் காரணமாக பல இடங்களில் அதிமுகவினரால் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஒரு அதிமுக நிர்வாகி நேற்று திமுக காட்சிக்கே தாவி விட்டார். யாருக்கு சாதகமாக முடிவெடுப்பது என்று தெரியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் முதல்வர்.

பன்னீர் தரப்புக்கு ஆதரவு கொடுத்தால் தன் தரப்பு கைவிட்டு போய்விடும், அதுவே அவர் தரப்பு முக்கியத்துவம் தரவில்லை என்றால் அவர்கள் கட்சியே மாறி செல்லும் நிலைக்கு வந்து விட்டனர்.

நிலை எவ்வாறாயினும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. சசிகலா குடும்பத்தினரிடம் ஜெயலலிதா எந்தளவுக்குக் கடுமை காட்டினாரோ, அதே அளவுக்குத்தான் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார்.

இதனால் தான் பன்னீர்செல்வம் விவகாரத்தை கையில் எடுத்து அதன் மூலமாக எடப்பாடி தரப்பை பலவீனம் அடைய செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் தினகரன்.

தற்போது முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் இருக்கிறது. மேலும், தினகரனோடு இணைப்பை நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.

இப்போதைக்கு எந்த ரூபத்தில் தினகரனுடன் கட்சியை இணைக்கும் முயற்சி நெருங்கி வந்தாலும், அதனை முறியடிக்கும் முனைப்பில் தான் இருக்கிறார் எடப்பாடி.