தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயலுக்கு ‘தித்லி’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்துக்குள் தித்லி புயல், ஆந்திரா ஓடிசா வழியாக இந்தியாவை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா, ஓடிசா மாநிலங்களில் பெரும் புயல் வீசும். மேலும், அக்டோபர் 11ம் தேதியன்று ஆந்திரா துறைமுகம் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டினத்தை கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தித்லி புயல் கரையை கடக்கும் போது ஒடிசாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.