வேறு ஒரு நபரின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்டுத்தி பணத்தை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தேசிய சேமிப்பு வங்கியின் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள கிளையில் நேற்று மாலை பணத்தை எடுக்கும் போதே குறித்த நபர் மாட்டிக் கொண்டார்.
வங்கி ஊழியர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப் படைக்கப்பட்டார். சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது; நபர் ஒருவரின் ஏ.ரி.எம் அட்டை அண்மையில் காணாமல் போயுள்ளது. அதில், பணத்தைப் பெற்றுக் கொள்ள உதவும் இரகசியக் குறியீடும் இருந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் உரிமையாளர் ஏற்கனவே வங்கியில் முறையிட்டுள் ளார்.
அதன் அடிப்படையிலேயே குறித்த நபர் பிடிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபர் அந்த அட்டையைப் பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாவரை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.