நேருக்கு நேர் மோதவிருந்த இரு ரயில்கள்….. மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான பயணிகள்….!!

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கிடையில் இடம்பெற்றிருந்தது.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுமே ஒரே புகையிரதப் பாதையில் பயணித்துள்ளமையினால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த பாரியதொர் விபத்து, புகையிரத ஊழியர்களின் செயற்பாட்டினால் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் இரு ரயில்கள் குறித்த புகையிரதப் பாதையில் பயணித்த நிலையில் தடைப்பட்டு அவ்விடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக புகையிரதத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.