கொடைக்கானல் அருகே இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே, கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டம்டம் பாறை பகுதியில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது.
இதுபற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். அதில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம், பாலக்காபாடி, காஞ்சிபட்டா பகுதியை சேர்ந்த 32 வயதான முகமது சமீர் என தெரியவந்தது.
இதுதொடர்பான விசாரணையில் மனைவி பிர்தோஷ் மற்றும் அவரது கள்ளக்காதலன் முகமது யாசிக் ஆகியோர் சமீரை கொலை செய்து உடலை கொடைக்கானல் அருகே வீசியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரே அதிர்ச்சியடையும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இருவரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, முகமது சமீர் அரபு நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிர்தோஷ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமீர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குடும்பத்தினரை பார்க்க வந்துள்ளார். இதனால் மல்லாகாப்பில் உள்ள பெற்றோர் வீட்டில் பிரதோஸ் அடிக்கடி சென்று தங்கி வந்தார்.
பெற்றோர் வீட்டின் அருகே டிரைவர் முகமது யாசிக்கின் சித்தி வீடு இருந்தது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சந்திப்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை பிரதோசின் தந்தை ஜாசத்உசேன் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிடுவதாயில்லை. இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சமீர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால் கள்ளக்காதலர்கள் சந்திக்க இடையூறு ஏற்பட்டதால் இருவரும் சேர்ந்து முகமது சமீரை கொலை செய்யத் திட்டமிட்டனர்.
அதன்படி கள்ளக்காதலனான கார் டிரைவர் முகமது யாசிக் திட்டப்படி, தனது கணவருடன் பேசி கொடைக்கானல் சுற்றுலா செல்ல பிர்தோஷ் திட்டமிட்டார்.
தங்கள் கொடைக்கானல் பயணத்துக்கு, கார் டிரைவராக முகமது யாசிக்கையே ஏற்பாடு செய்தார். கொடைக்கானல் சுற்றுலா வரும் வழியில், அனைவரும் இளநீர் குடித்துள்ளனர். அதில் சமீர் குடித்த இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் மனைவி பிர்தோஷ்.
இளநீரை குடித்த சமீர் மயங்கியுள்ளார். இதனால் அவர் இறந்துவிட்டதாக எண்ணிய கள்ளக்காதல் ஜோடி அவரை பின் சீட்டில் கிடத்திவிட்டு காருக்குள்ளேயே உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
அப்போது அரை மயக்கத்தில் முனகியுள்ளார் சமீர். இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் செல்லும் வழியிலேயே கத்தி ஒன்றை வாங்கி சமீரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.
மேலும் உடலை கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசிவிட்டு இருவரும் எஸ்கேப்பாகியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பிரதோசிடம், முகமது சமீர் தம்பி, அண்ணன் எங்கே? என்று கேட்டுள்ளார்.
அங்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு முகமது யாசிக்குடன் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு கடைசியாக பெங்களூருவில் பதுங்கியுள்ளார் பிர்தோஷ். இதனையறிந்த போலீசார் அவர்களை கைது செய்து தேவதானப்பட்டி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.