வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் உறங்கி கொண்டு இருந்த நிலையில், அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்து கொண்டு, வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ மற்றும் வீடுகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.