விழுப்புரம் கே.கே. சாலையில், மணிநகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 32). இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சைலன்சரில் எதிர்பாராத விதமாக காலை வைத்துள்ளார். இதில் ஜீவாவுக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டுயுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் ஜீவாவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு ஜீவாவை அழைத்து சென்றார். பின்னர் காலில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு மருந்து வைத்து கட்டு போட்டுள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காலில் தீக்காயம் அடைந்தவருக்கு வாட்ச்மேன் சிகிச்சை அளித்த காட்சி வாட்ஸ்-அப் மூலம் பரவி வருகிறது. வாட்ச்மேன் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.