கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட, இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தொடங்கப்பட்டது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிம்ரன் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி படுத்தியுள்ளது.
இப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கயுள்ளார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பிற்கு இடையே ரஜினி உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். ரஜினி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், அவரை பார்க்க வந்தால் பரபரப்பு ஏற்பட்டது.