ஆதாரங்களுடன் ஆளுநரை சந்திக்க போகும் முக.ஸ்டாலின்.!! வெளியான பரபரப்பு தகவல்.!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த வருடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மேலும், அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ், தற்போது உள்ள ஆளுநரை நேரில் சந்தித்து இது சம்பந்தமான அறிக்கையை சம்மதித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் வைத்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியான திமுகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தது.

மேலும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய தமிழக ஆளுநர், ”தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தான் ஆளுநராக பொறுப்பேற்ற பின் நியமனம் செய்த துணைவேந்தர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே நியமித்ததாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், ”தமிழக ஆளுநரே பல்கலைக்கழகங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததால், உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநரை இன்று மாலை திமுக ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.