சென்னை போரூர் அடுத்த குன்றத்துார் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கி ஊழியராக பணி புரிந்து வருகிறார். அவரது மனைவி 25 வயதான அபிராமி.
அபிராமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்திற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடந்த மாதம், 1ம் தேதி, அபிராமி தனது குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்தார்.
இதையடுத்து, அபிராமி மற்றும் சுந்தரத்தை, கடந்த மாதம் 5ம் தேதி, கைது செய்து, புழல் மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவை பெரும்பாலும் வதந்தி என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருகுழந்தைகளும் பாலில் விஷயம் வைத்து கொன்றதற்கான மருத்துவ அறிக்கை இன்னும் வெளிவராத காரணத்தினால் தான் 35 நாட்களாக எந்த வித நடவடிக்கையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அபிராமி.
மருத்துவ அறிக்கை வந்த பின்பு, அது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.
அபிராமியை சந்திக்க பெற்றோர்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரைச் சந்திக்க பெற்றோர், கணவர், உறவினர் என யாரும் வரவில்லை என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
ஈவு இரக்கமின்றி குழந்தையை கொலை செய்ததால் சக கைதிகளும் அவர் மீது வெறுப்பை காட்டி வருகின்றனர்.
இதனால் சிறைக்குள் பிரம்மை பிடித்ததை போல சுற்றி வருகிறாராம் அபிராமி. இப்படியே விட்டால் விசாரணை கூட நடத்த முடியாது என்பதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.
சிறையில் அடைத்த புதிதில் சக கைதிகளுடன் பேச முற்பட்ட அபிராமி இப்போது தனிமையை மட்டுமே விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிக மனஅழுத்தத்தில் அவர் இருந்துவருகிறார்.