காதலியுடன் ஊர் சுற்ற பணமில்லையாம்.,..! பணத்தை திருடி காதலியுடன் சுற்ற துணிந்த ஐடி ஊழியர்.!

டெல்லியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண்மணியின் பெயர் தேவ்யானி. இவர் தன்னுடைய கைப்பையில் ரூ.10 ஆயிரம் வைத்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நிகழ்ச்சி முடிந்த உடன் தனது கைப்பையை சோதிக்கையில் அந்த பணமானது காணாமல் போனது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மனுவை ஏற்ற காவல் அதிகாரிகள் அந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ய துவங்கினர். அப்போது இவரின் கைப்பையில் உள்ள பணத்தை ஒரு நபர் தூக்கி செல்வது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சம்பந்தப்பட்ட நபரை பற்றி விசாரணை செய்த காவல் துறையினர்., திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் தாம் கூகிள் நிறுவனத்தின் ஊழியர் எனவும், காதலிக்காக செலவு செய்வதற்கு பணம் இல்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.