ஆசைக்கு இணங்க மறுத்த சிறுவனின் மர்ம உறுப்பை., திருமணம் ஆன பெண் செய்த கொடூரம்.!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண் குழந்தை முதல் பல்லு போன பாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் #meetoo என்ற ஹாஷ்டேக் மூலம் திரை பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகை ஸ்ரீ ரெட்டி திரை துறையில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து அரைநிர்வாண போராட்டம் நடத்திய போது அவருக்கு எதிராகவே பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இன்று பல நடிகைகள் மனம் திறந்து தங்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து ட்வீட் போட்டு பலரின் உண்மை முகங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கிவருகின்றனர்.

சிறுமிகளுக்கு மட்டும் பாலியல் தொந்தரவு நடப்பதாக நாம் நினைத்து இருக்கலாம், ஆனால் ஆண்களில் உள்ள சில மனித மிருகங்கள் போல், சிறுவர்களையும் பாலியல் சீண்டல்கள் செய்து கொடுமை படுத்தும் சில பெண் மனித மிருகங்களும் உள்ளது. இவர்கள் பற்றிய உண்மை வெளிவருவதில்லை. ஆனால் இவர்கள் எல்லை மீறி சித்தரவதையில் ஈடுபடும் போது தான் சிக்குவார்கள்.

இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு மறுத்த ஒரு சிறுவனின் அந்தரங்க உறுப்பு மீது கம்பியால் சூடு வைத்த திருமணமான ஒரு பெண் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நொய்டா அருகே உள்ள சப்ரவுலா எனும் கிராமத்தில் ஒரு சிறுவனின் பக்கத்து வீட்டில் உள்ள திருமணமான பெண், அந்த சிறுவனுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும், அந்த சிறுவனினின் அந்தரங்க உறுப்பில் நெருப்பில் பழுக்கவைக்கப்பட்ட கம்பியால் சூடு வைத்துள்ளார். இதனை அந்த சிறுவன் தன் தாயிடம் கூற அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை யாரிந்த அந்த பெண் தற்போது தலைமறைவாக உள்ளார்.