சின்மயியை ஹோட்டலுக்கு அழைத்த விவகாரம்! நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு பதிலளிப்பாரா வைரமுத்து?

பிரபல திரைப்பட நடிகையான கஸ்தூரி வைரமுத்துவின் உதாசீனமும், மெளனமும் சந்தேகங்களை வலுக்கச் செய்கிறது என்று கூறியுள்ளார்.

பாடகியான சின்மாயி கவிஞர் வைரமுத்து தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். விற்சர்லாந்தில் நடந்த ஒரு இசை விழாவில் பாட சின்மயி சென்ற போது இப்படி நடந்ததாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் திரைப்பிரபலங்கள் பலரிடம் அனுபவித்த் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி நேற்று வைத்துவிடம் நான் என்று அவரைப் பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரி, உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ?

சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது. #Vairamuthu என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் மட்டுமின்றி பலரும் வைரமுத்து இதை அலட்சியப்படுத்தாமல் உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.