விடுதலைப் புலிகளின் அதி உயர் பாதுகாப்பு காவலரண்களை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு ஆயுத பலத்தை ஒருங்கிணைத்த விடுதலைப் புலிகள் புதுமாத்தளன் தொடக்கம் இரட்டைவாய்க்கால்-நந்திக்கடல் வரைக்கும் சுமார் 14 கிலோமீற்றர் நீளத்தில் 15 அடி உயரத்தில் மண் அனைக்காவலரண்களை அமைத்திருந்தனர்.
இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுமாத்தளன் பகுதியை ஊடறுத்து தாக்கிய இலங்கை இராணுவத்தினர் 3 சதுர கிலோமீற்றர் தூரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில், இராணுவத்தினர் தமது வெற்றியின் நினைவாக இந்த காவலரண்களை தற்பொழுது வரை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.