மனைவியை குழந்தையுடன் எரிக்க முயன்ற கணவன்….

திருவாரூரில் ரூ20 லட்சம் வரதட்சனை கேட்டு பெண் மற்றும் குழந்தையை அரிவாளால்  வெட்டி மண்ணெணெய் ஊற்றி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்ல முயற்சி செய்ததில், அந்த பெண் தனது குழந்தையுடன் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா, இவர் காட்டூர் என்ற இடத்தில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சோ்ந்த ஜெயநந்தினிக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜெயநந்தினியை அவரது கணவர் கிஷோர்ராஜா மற்றும் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதனையடுத்து ஜெயநந்தினி பணம் பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்று இன்று திரும்பி உள்ளார். அவரிடம் கணவன், மாமியார், மாமனார், நாத்தனார், அவரது கணவர் ஆகியோர் வீட்டிற்கு வந்த ஜெயநந்தினியை பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணமில்லை என ஜெயநந்தினி கூற தகாராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன் கிஷோர்ராஜா தாயார் ராணி அரிவாளை கொண்டு ஜெயநந்தினியை வெட்டியுள்ளார். பின்னர் கிஷோர்ராஜா குடும்பத்தினர் ஜெயநந்தினி மற்றும் குழந்தை மீது மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இருந்து தப்பி காயங்களுடன் ஜெயநந்தினி தனது குழந்தையுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தானே அனுமதியாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த நகர காவல்துறையினர் மருத்துவக்கல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ஜெயநந்தினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வரதட்சனை கேட்டு கொல்ல முயற்சி நடைபெற்ற சமப்வம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.