கவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார்.
இவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார்.
“அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்” என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்னாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.
One 100% true. Took time for her to open up about it even to me. She didn’t want to do anything that needed explaining. And his son is a dear friend to both of us and a gem of a human being. We wanted him there. Which meant she had to invite the dad too. https://t.co/jgtJ1ISaE2
— Rahul Ravindran (@23_rahulr) October 9, 2018