வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி….!

வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..! இந்த மாதிரி டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க..!!

வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையானவை:

முற்றிய வாழைக்காய் – 2,

பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
அரிசிமாவு – சிறிது,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி விட்டு, வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.

பிறகு அரிசி மாவைத் தூவி லேசாக பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான்.. வாழைக்காய் வறுவல் ரெடி.

இதை சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.