பணம் கேட்டு கொடுக்க மறுத்த பெண், பிச்சைக்காரன் செய்த அட்டூழியம்!

சீனாவில் பெண் டிரைவர் ஒருவர் காரை நிறுத்தியபோது தன்னிடம் பணம் கேட்ட பிச்சைக்காரனுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் பிச்சைக்காரர் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

சீனாவில் காரை ஓட்டி வந்த பெண் டிரைவர் ஒருவர் சிக்னலில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது கால் ஊனமுற்ற நபர் ஒருவர் பிச்சை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கொடுக்க பெண் டிரைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தன் கையில் இருக்கும் தடியை வைத்து சரமாரியாக காரின் கிளாஸை தாக்கியுள்ளார். பின் கார் கதவை திறந்து அந்த பெண் டிரைவேரையும் தாக்கியுள்ளார். இதில் பெண்ணுக்கு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து 10 நாட்கள் சிறையில் வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.