பாலியல் பாடகர்கள்! : சின்மயி வெளியிட்ட பட்டியல்…

பாலியல் தொல்லை அளிக்கும் பாடகர்கள் என்று கர்நாடக இசைக்கலைஞர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரபல திரைப்பாடகி சின்மயி.

ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் “மீ டூ” என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பல்வேறு பிரபல நபர்கள் மீதும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்த்திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீதும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை சின்மயி ஆமோதித்தார். மேலும் வைரமுத்து மூலம் தனக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதாக பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கர்நாடக இசை வல்லுநர்கள் சிலரும் பாலியல் ரீதியாக பெண்களை தொல்லைப்படுத்துவதாக ட்விட்டரில் பதிவிட்ட சின்மியி அவர்களது பட்டியலையும் வெளியிட்டுள்ளர்.

அதில், பிரபல கர்நாடக இசை வல்லுநர்களான பி.எம்.சுந்தரம், பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகநாத சர்மா, டி.என்.சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண் ஆகியோரது பெயர்கள் உள்ளன.