சென்னையில், தகாத உறவுக்கு மகளை அழைத்த அம்மா..! மகளை கொள்ளவும் முயற்சி..! தந்தை போலீசில் புகார்..! தாய் கைது ..!!
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தை சார்ந்தவன். எனது உறவினர் ஒருவர் காவல்துறையில் SP யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாரம்பரியமான எனது குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய எனது மகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை என்னிடம் தெரிவித்தாள். அதைக் கேட்க எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதை விசாரித்தபோது அந்த சம்பவம் உண்மை எனவும் தெரியவந்தது.
என்னுடைய 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். தகாத உறவுக்கு மறுத்த எனது மகளை கொன்றுவிடுவேன் எனவும் எனது மனைவியும் என்னுடைய மாமியாரும் சேர்ந்து மிரட்டி உள்ளனர். மேலும் எனது மகளை கொல்வதற்கும் அவர்கள் துணிந்து விட்டார்கள்.
நான் எச்சரித்தும் எனது மனைவியும், மாமியாரும் திருந்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து என்னுடைய மகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து தீவிர வேட்டைக்கு பின் அவர்கள் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் கும்பகோணத்திற்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.