இந்தியாவையே கள்ளகாதலால் அதிரவைத்த சம்பவம் குன்றத்தூர் அபிராமியின் சம்பவம். இவர் கள்ளகாதலுக்காக தனது 2 பிள்ளைகள் மற்றும் இவரின் கணவரையும் கொலை செய்யும் திட்டம்தீட்டி., கணவர் தப்பிக்கவே 2 பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்தது.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இவர் அதே பகுதியில் உள்ள பிரியாணிக்கடையை சார்ந்த சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு பின்னர் அவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது பிள்ளைகளை விஷம்வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.
தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டு இவரின் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் சிறையில் இருக்கும் போது தாம் தவறு செய்து விட்டதாகவும்., காமம் தனது கண்ணை மறைத்து எனது வாழக்கையை முடித்துவிட்டதாகவும் கூறி அழுதுள்ளார். மேலும் தனது குழந்தைகளை தானே கொலைசெய்துள்ளேன் என்றும் அவர் அவரது குழந்தைகளின் புகைப்படங்களை வைத்து அழுதுள்ளார்.
முதலில் இவரின் பேச்சுக்களை காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த சக கைதிகள் தற்போது இவரின் முழு கதை தெரிந்தவுடன் இவரை தனிமையில் ஒதுக்கியுள்ளனர். இவர் தனிமையில் இருந்து வருவதால் மிகுந்த மனஉளைச்சலிலும், கடும் மனவேதனையுடனும் இருந்து வருகிறார். மேலும் தாம் செய்த காரியத்திற்கு எந்த விதமான தண்டனை அளித்தாலும் எனக்கு மன்னிப்பே கிடையாது என்றும் கூறி வருகின்றார். மேலும் பெற்றோர், கணவர் இருந்தும் இவரின் செயலால் ஆதரவில்லாமல் இருக்கும் இவரை தற்போது சககைதிகளும் வெறுத்து ஒதுக்குவதால் இவர் கூடிய விரைவில் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறக்கூடும் என்பதில் ஐயமில்லை.