பசுபிக் தீவு பகுதியில் உள்ளது பப்புவா நியூ கினியா. இந்த நாட்டில் உள்ள போர்கோர மாநிலத்தில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் சுமார் 7 ஆக பதிவானது.
அதிகாலையில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தலைதெறித்தபடி உயிரை கையில் பிடித்து வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளார். மேலும் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளார். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.