குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கிய நபர்!

கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் போக்குவரத்து போலீஸ் லிங்கப்பா மற்றும் சரத் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி வாகன சோதனை செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து காவலரயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.