திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்நிலையில், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தனர். ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, முன்னதாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது தஞ்சை நெடுஞ்சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து திருவெறும்பூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து 52 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, காட்டூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து எஸ்.எப்.ஐ மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் ஆதாம் தீன் கூறியவை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது. தடியடி நடத்தும் அளவிற்கு மாணவர்கள் சமூக விரோத சக்திகள் என்று கூறினார்.