ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது தீவிரவாதிகள் எல்லையை தாண்டி வருவதும், துப்பாக்கிசூடு நடத்துவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருத்த 2 பயங்கரவாதிகள் இராணுவ வீரர்களை சுட ஆரம்பித்தனர். எதிர்பாராத இந்த தாக்குதலில் நல்ல வேலையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பதிலடி அளிக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்காலிகமாக இணையதள சேவையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருதரப்பினரும் துப்பாக்கிசூடு நடத்தி வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.