நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சண்டக்கோழி 2.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். திரையுலக பிரபலன்களான வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கபாலி விஷ்வா, சண்முகராஜன் மற்றும் தென்னவன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டீசரானது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டீசரை பார்த்த அனைவரும் இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று கேட்டனர். அதற்கு விரைவில் வரவிருக்கின்றது என்று படக்குழு அறிவித்தது.
My Lovable Villi #Pechi from #sandakozhi2 @VishalKOfficial @thisisysr @KeerthyOfficial @varusarath @shakthi_dop @Cinemainmygenes @brindasarathi @gopiprasannaa @jayantilalgada @LycaProductions @SonyMusicSouth pic.twitter.com/yMNU8PGPHg
— Lingusamy (@dirlingusamy) October 11, 2018
அதன் படி இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளர். அதன் படி தனது ட்விட்டர் பக்கத்தில் லிங்குசாமி எனக்கு பிடித்த வில்லி #PECHI என்று குறிப்பிட்டுள்ளார். அதன் படி நடிகை வரலட்சுமி இந்த திரைப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார் என்பதும், அவரின் பெயர் பேச்சி என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.