திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே குருமலை, குழிப்பட்டி மற்றும் மாவடப்பு ஆகிய மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமங்களை சேர்ந்த 17 பேர் நேற்று மாலை தாங்கள் சேமித்த காட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு உடுமலை நகர் பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் விற்பனை முடித்து, தங்களின் ஊர்களுக்கு திரும்பிய அவர்கள் குழிப்பட்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான வேனில் சென்றுள்ளனர். இரவு 11 மணியளவில் கோவை மாவட்டம் காடம்பாறை காவல்நிலைய சரகம் மரப்பாலம் அருகே உள்ள வளைவில் வந்தபோது எதிர்பாரத விதமாக வேன் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குருமலையை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்தவர்களில் 5 பேர் கோவை மருத்துவமனைக்கும் 9 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.