உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை, சமூகவலைத்தளமான ட்வீட்டர் பக்கத்தில் #metoo என்ற ஹாஸ்டக் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்திற்கு பின், நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களின் பாதுகாப்பை எண்ணி அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் #metoo என்ற ஹாஸ்டக் சமூக வலைத்தளத்தில் பிரபலமானது, இதனை பயன்படுத்தி சமூகத்தில் ஒரு மற்றதை கொண்டு வரலாம் என்று நினைத்த பெண்கள். தங்களுக்கு நடந்த பாலியல் குற்றங்களை வெளிப்படையாக எழுத ஆரம்பித்தனர்.
இதில், பிரபல பாடகி சின்மயி கடந்த சில நாட்களுக்கு முன், பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார். இந்த விடயம் விஸ்வருபம் எடுத்துள்ளது. பாடகி சின்மயிக்கு திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து உள்ள போதிலும். இந்த விடயம் குறித்து பெரிய நடிகர்கள் யாரும் இதுவரை வாய் திறக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், பாடகி சின்மயி-க்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்??singer @Chinmayi accusations merit further investigations Cineworld silent??? https://t.co/pCSicsUMBh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 10, 2018