சின்மயி விவகாரம்: அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்களுக்கு பலம் அதிகரிக்கட்டும் என சின்மயி விவகாரம் குறித்து லஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோடு, சினிமா உலகை சேர்ந்த சிலரும் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக சின்மயி டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்.

இது குறித்து சின்மயி டுவிட்டர் பக்கத்துக்கு டேக் செய்து நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், #MeTooMovement டேக்-குக்கு கீழ் பதிவிடும் போது நாம் பொறுப்பாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பெண்களை மொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்

பாலின சமத்துவம் அடைய வேண்டும் என்றால், நம் உடலின் மேல் உயர வேண்டும்.

இது போன்ற விடயங்களை துணிச்சலாக பேசும் பெண்ணுக்கு இன்னும் பலம் கூடட்டும் என பதிவிட்டுள்ளார்.